குறியீட்டு முறை காலவரையின்றி ஒத்திவைப்பு
வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் மற்றும் குறியீட்டின்படி, ஒதுக்கீட்டிற்கு உட்பட்ட எரிபொருள் வழங்கும் திகதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை நடைமுறையில் நடைமுறைப்படுத்த முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் காப்புறுதித் தொகை நீக்கப்படுவதாக காப்புறுதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, குறியீட்டு முறை ஜூலை 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
எரிபொருள் வழங்குவதற்கான வாகன எண் தகடுகளின் கடைசி இலக்கங்களின் அமைப்பு திருத்தப்பட்டுள்ளது.
0, 1, 2 - செவ்வாய் மற்றும் சனிக்கிழமை
3, 4, 5 - வியாழன் மற்றும் ஞாயிறு
6, 7, 8, 9 - திங்கள், புதன் மற்றும் வெள்ளி
தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான குறியீடு சோதனை ஜூலை 21 முதல் 24 வரை கொழும்பில் பல இடங்களில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.