பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Nila
2 years ago
பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகளில் பொய்யான அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பதில் ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் 15 ஆம் சரத்தின் கீழ், இவ்வாறான வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் அல்லது மக்களைத் திரட்டி, சட்டத்திற்கு எதிரான ஏதேனும் சம்பவங்களை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அவசரகாலச் சட்டம் தொடர்பான வர்த்தமானியின் பிரகாரம் சட்டங்களை மீறியதாக அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக அதன் சைபர் குற்றப்பிரிவு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!