இலங்கையின் ஜனாதிபதியாக நாளை யார் பதவியேற்றாலும் இலங்கைக்கு உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக யார் வந்தாலும், இலங்கைக்கு உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசியல் கட்சிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Irrespective of who becomes the President of Sri Lanka tomorrow it is my humble and earnest request to Hon. PM Shri @narendramodi, to all the political parties of India and to the people of India to keep helping mother Lanka and it’s people to come out of this disaster.— Sajith Premadasa (@sajithpremadasa) July 19, 2022
இலங்கையின் ஜனாதிபதியாக நாளை யார் பதவியேற்றாலும் இலங்கைக்கு உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும், இந்திய மக்களும் பேரழிவிலிருந்து இலங்கை மீண்டு வர தொடர்ந்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.