பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் - ரணில்

Kanimoli
2 years ago
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் - ரணில்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐந்து அல்லது பத்து வருடங்கள் தேவையில்லை எனவும், அடுத்தாண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் ஸ்திரமடைய ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CNN செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே பதில் ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாட்டின் நிதி நெருக்கடி குறித்த உண்மைகளை கடந்த அரசாங்கம் மூடி மறைத்து விட்டது.

கோட்டாபாய ராஜபக்ஷ அரசாங்கம் உண்மையைக் கூறவில்லை. இலங்கை திவாலானதாக கடந்த அரசாங்கம் அறிவிக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என கடந்த அரசாங்கம் கூறவில்லை.

மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எங்களுக்கு 5 அல்லது 10 ஆண்டுகள் தேவையில்லை. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாம் ஸ்திரமடைய தொடங்குவோம்.

2024ஆம் ஆண்டளவில் நாம் செயல்படும் பொருளாதாரத்தை உருவாக்குவோம், அது நிச்சயமாக வளர்ச்சியடையத் தொடங்கும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!