இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார் ரணில் விக்ரமசிங்க
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க, தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு நாடாளுமன்றத்தின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தெரிவுக்காக போட்டியிட்டனர்.
இதில்டளஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும், அனுரகுமார திசாநாயக்கவுக்கு 03 வாக்குகளும் கிடைத்துள்ளன.
புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றில் ஆரம்பமானது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முதலில் வாக்களித்தார்.
மொத்தமாக 225 பேரில், 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த வாக்கெடுப்பில் பங்குக்கொள்ளவில்லை.