கோட்டா நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கான காரணத்தை கூறிய அமெரிக்காவின் முக்கிய இராஜதந்திரி
இலங்கையில் ஊழல்மோசடிகளாலும், பணவீக்க அதிகரிப்பினாலும் தூண்டப்பட்ட அமைதியின்மையின் விளைவாக கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறுவதுடன் ஜனாதிபதிப்பதவியிலிருந்து விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாக அதிகாரி சமந்தா பவர், ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெறும் இறுதி நாடாக இலங்கை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பு மற்றும் போசணை மட்டம் ஆகியவற்றின் நிலை எவ்வாறானதாக உள்ளது என்பது குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே சமந்தா பவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெறும் இறுதி நாடாக இலங்கை இருக்காது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஊழல்மோசடிகளாலும், பணவீக்க அதிகரிப்பினாலும் தூண்டப்பட்ட அமைதியின்மையின் விளைவாக அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறுவதுடன் அப்பதவியிலிருந்து விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 'வரலாற்று வழிகாட்டலின் அடிப்படையில் நோக்குகையில் இறுதியாகக் கவிழும் அரசாங்கம் இதுவல்ல என்பதை நாமறிவோம்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகளாவிய ரீதியிலுள்ள மிகவும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் பசியினாலும், மந்தபோசணையினாலும் வெகுவாகப் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பகிர்ந்துகொண்ட சமந்தா பவர், பசிக்கும் மந்தபோசணைக்கும் எதிராகப் போராடுவதற்கு அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணையவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.