விபத்தில் மாநகர சபை ஊழியர் ஒருவர் மரணம்

#SriLanka #Death
Prasu
2 years ago
விபத்தில் மாநகர சபை ஊழியர் ஒருவர் மரணம்

நீர்கொழும்பு நகரில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் நீர்கொழும்பு மாநகர சபையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு, தலாதுவ வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு நகரை நோக்கிப் பயணித்த, நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரப் பெட்டியின் பின்பக்கமாக இருந்து பயணித்த குறித்த நபர், கீழே விழுந்தமையினால் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என நீர்கொழும்பு பொலிஸார் கூறினர்.

விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தை செலுத்திச் சென்ற சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸார் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!