நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன? சுமந்திரன் கேள்வி
Prabha Praneetha
2 years ago
மக்கள் ஆணையை இழந்திருக்கிற மொட்டு கட்சியின் பிடிக்குள் நாடாளுமன்றம் தொடர்ந்தும் இருப்பது இன்றும் நிரூபணமாகியிருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தகத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘இன்று அநுர குமார திசாநாயக முக்கிய கருத்தொன்றை கூறினார் டலஸ் அளகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்கள்ஃகட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஐ விட அதிகமானது.
அப்படியானால் என்ன நடந்தது???’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.