தம்மிக்க பெரேரா இராஜினாமா

Kanimoli
2 years ago
தம்மிக்க பெரேரா இராஜினாமா

  நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாளை (21) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். பின்னர், ஜூன் 24ஆம் திகதி முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அவர், ஜூலை 10ஆம் திகதி இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று தம்மிக்க பெரேராவும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்திருந்தார்.

அதேவேளை பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவும் நாடாளுமன்றத்தில் பிரவேசிப்பதற்காக வர்த்தகத்தில் வகித்த பதவிகளைத் துறந்திருந்தார். மேலும் தம்மிக்க பெரேரா 16 நாட்கள் மட்டுமே பதவி வகித்த நிலையில் மிக குறுகிய காலம் அமைச்சராகப் பதவி வகித்தவர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!