எரிபொருள் பதுக்கல்: 9 நாட்களில் 997 பேர் கைது
Mayoorikka
2 years ago
சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் கடந்த 9 நாட்களில் 997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான 9 நாட்களாக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த சுற்றிவளைப்பில் 33,847 லிட்டர் பெட்ரோல், 1,09,634 லிட்டர் டீசல் மற்றும் 19,214 லிட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 1077 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.