இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்ஷ டி சில்வா
Prabha Praneetha
2 years ago
பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹர்ஷ டி சில்வா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் புதிய ஜனாதிபதி வெற்றி பெறுவார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகள், அநுர குமார திசாநாயக்கவுக்கு 3 வாக்குகள் என்ற நிலையில் 134 வாக்குகள் என்ற பெரும்பான்மையுடன் ரணில் விக்ரமசிங்க இன்று (20) வெற்றி பெற்றுள்ளார்.