மக்கள் ஆணையை இழந்திருக்கிற மொட்டு கட்சியின் பிடிக்குள் நாடாளுமன்றம் - எம்.ஏ சுமந்திரன்
Kanimoli
2 years ago
மக்கள் ஆணையை இழந்திருக்கிற மொட்டு கட்சியின் பிடிக்குள் நாடாளுமன்றம் தொடர்ந்தும் இருப்பது இன்றும் நிரூபணமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தகத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
‘இன்று அநுர குமார திசாநாயக முக்கிய கருத்தொன்றை கூறினார் டலஸ் அளகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்கள் , கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஐ விட அதிகமானது. அப்படியானால் நாடாளுமன்றில் என்ன நடந்தது எனவும் கூட்டமைப்பின் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.