கோட்டாபயவின் பதவி விலகலும் -ரணிலுக்கான ஆதரவும் கீதா குமாரசிங்க வெளியிட்ட தகவல்
எதிர்பார்க்காத விதத்தில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி சென்றதாகவும் இதனால், கட்சி என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிபரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டு,சர்வதேச உதவிகளை கூடிய விரைவில் பெற்று. நாட்டுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருக்க வேண்டும்.
தற்போது ரணில் விக்ரசிங்க புதிய அதிபராக தெரிவாகியுள்ளார். சர்வகட்சி அரசாங்கம் என்ற வகையில் முன்நோக்கி செல்லும் என நம்புகிறேன். மக்களின் கோரிக்கையும் இதுதான் என்பதால், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.
பெட்ரோல, டீசல், சமையல் எரிவாயு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. அவை நாட்டை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன. உரமும் வழங்கப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் இனிவரும் காலத்தில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.