ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்த 4 பேருக்கு விளக்கமறியல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபரான இயன் பெரேரா வௌிநாட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மன்றில் அறிவித்தனர்.
சந்தேகநபர் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளியான சீசீடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் சந்தேகநபர்கள் மூவர் தொடர்பான அடையாள அணிவகுப்பை எதிர்வரும் 27 ஆம் திகதி நடத்துவதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.