6 வருடங்களின் பின்னர் விடுதலையான கட்டளை தளபதி
#SriLanka
Kobi
2 years ago
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் இன்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி தற்போது நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.