ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி இந்த நாட்டு மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை - ஹிருணிகா

Kanimoli
2 years ago
 ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி இந்த நாட்டு மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை - ஹிருணிகா

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி இந்த நாட்டு மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றினையிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் ராஜபக்ச அவர்களே உங்களின் வெற்றி நாடாளுமன்ற யதார்த்தத்தின் விசித்திரமான பிரதிநிதித்துவம் மட்டுமே. எனவே மக்களுடன் நின்று ஜனநாயக கொள்கைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தயவு செய்து, உரிமைக்காக போராடும் மக்களின் கோரிக்கைகளை நசுக்காதீர்கள். மக்களின் குரலுக்கு செவிசாய்த்து விரைவில் பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!