ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க ஆயுதமேந்திய படையினரா...? - இலங்கை பிரச்சினையில் தலையிட்டது ஐ.நா

Nila
2 years ago
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க ஆயுதமேந்திய படையினரா...? - இலங்கை பிரச்சினையில் தலையிட்டது ஐ.நா

இலங்கையில் இன்று பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது காலிமுகத்திடலில் இருந்த ஆரப்பாட்டக்காரர்களை படையினரைக் கொண்டு கலைத்தமையே.

இச் சம்பவம் உலக நாடுகளை அதிர வைத்ததோடு ஐ.நா சபையும் கண்டிக்குமளவுக்கு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது.

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!