அமைதியான போராட்டத்தளம் மீது தாக்குதல் – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!
காலி முகத்திடலில் அமைதியான போராட்டத் தளம் மீது இன்று அதிகாலை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது.
இதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
இத்தகைய வன்முறைச் செயல்களை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.
‘கோட்டாகோகம’விற்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் சர்வதேச மன்னிப்பு சபை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஊடகவியலாளர்கள் தங்கள் பணியை செய்யவிடாமல் தடுப்பது ஊடகச் சுதந்திரத்தை நேரடியாக மீறுவதாக மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.