மீண்டும் பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி செயலகம்

Prabha Praneetha
2 years ago
மீண்டும் பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி செயலகம்

மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை  முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார் .

போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் விசேட குற்றப் பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!