முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த காமினி செனரத்துக்கு உயர் பதவி
முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த காமினி செனரத்துக்கு அரசாங்கத்தில் பதவி வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவரை ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதியின் செயலாளராக நியமித்த போது காமினி செனரத் அந்த பதவியில் இருந்து விலகினார்.
இதேவேளை, இரண்டு அமைச்சுக்கள் தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக திலகா ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக கலாநிதி அமல் ஹர்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.