சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
Nila
2 years ago
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி முதல் பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மதிப்பீட்டு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.