நாட்டின் நெருக்கடிகளுக்கு என்னிடமே தீர்வுள்ளது! அத்துரலிய

Mayoorikka
2 years ago
நாட்டின் நெருக்கடிகளுக்கு என்னிடமே தீர்வுள்ளது!  அத்துரலிய

நாடு எதிர்நோக்கியிருக்கும் எரிபொருளின்மை, எரிவாயு தட்டுப்பாடு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை நாட்டில் நிலவும் இச்சிக்கல் நிலைமைகளுக்கு மூன்று மாதங்களுக்குள் இலகுவாக தீர்வு காண முடியும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த நெருக்கடிகளுக்கான தீர்வுகள் இல்லை என்பதனை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ள முடியும். அவரால் அது முடியாது என்று தெரிந்ததும் எனது பணிகளை ஆரம்பிக்க தயாராக இருக்கிறேன் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!