ஜனாதிபதி மாளிகையில் பொருட்கள் திருடப்பட்டுள்ளன: தொல்பொருள் திணைக்களம்
Mayoorikka
2 years ago
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை ஆகிய அலுவலகங்களில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில திருடப்பட்டுள்ளதாகவும் இலங்கை தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பொதுச் சொத்து மற்றும் தேசிய மரபுரிமைகளுக்கு உட்படும் இடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் அங்குள்ள பொருட்களைத் திருடுவதும் தண்டனைக்குரிய பாரிய குற்றம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகைக்கு ஏற்பட்டிருக்கும் சேத விபரம் தொடர்பில் இரு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு முழுமையான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தொல்பொருள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.