சிங்கப்பூரிலிருந்து ரணிலுக்காக ஆதரவு திரட்டிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

Nila
2 years ago
சிங்கப்பூரிலிருந்து ரணிலுக்காக ஆதரவு திரட்டிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமங்கவைத் தெரிவு செய்வதற்காக தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவு திரட்டினார் என்று அவரின் கட்சி வட்டாரங்கள் கூறின.

சிங்கப்பூரில் இருந்து ரணிலுக்கு ஆதரவு வேட்டையை தொடங்கிய கோட்டாபய ராஜபக்ஷ, தன்னோடு அரசியலை தொடங்கி பாராளுமன்றம் வந்தவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் உரையாடினார்.

தனது வெற்றிக்காக உருவாக்கப்பட்ட ‘வியத்மக’ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமண போன்ற உறுப்பினர்கள்கூட டலஸூக்கு ஆதரவளிப்பதாக நேரடியாக அறிவித்திருந்தனர். இதனை சிங்கப்பூரில் இருந்த கோட்டாவும் அறிந்து கொண்டார்.

இதையடுத்து அவர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக் குமாறு கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!