மீண்டும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை!
Mayoorikka
2 years ago
பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.