தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை
Mayoorikka
2 years ago
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சபைக்கு வரும் சிறந்த முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.