வசந்த முதலிகே உட்பட 6 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

Prathees
2 years ago
வசந்த முதலிகே உட்பட 6 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 6 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (25) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, ரங்கன லக்மால், எரங்க குணசேகர, தந்தை ஜீவந்த பீரிஸ் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் ஆகிய ஆறு பேருக்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவை உடனடியாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

ஜூன் 09ஆம் திகதி கோட்டை பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் தமக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!