இலங்கையில் பெட்ரோலுக்கு மாற்றீடாக மக்கள் பயன்படுத்தும் பொருட்கள்
Kanimoli
2 years ago
இலங்கையில் எரிபொருளுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோலுக்கு மாற்றீடாக சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிலர் பெட்ரோலுடன் டின்னர் மற்றும் டெபர்ன்டைன் போன்ற பொருட்களை கலந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் டின்னர் மற்றும் டெபர்ன்டைன் என்பனவற்றுக்கு அதிகளவு கேள்வி எழுந்துள்ளது.
12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியில் கட்டுப்பாடு: கஞ்சன விஜேசேகர அறிவிப்பு
கறுப்புச் சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 3000 ரூபாவாகவும், ஒரு லீட்டர் டீசலின் விலை 2000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
எனினும், டின்னர் கலந்த பெட்ரோலின் விலை 1500 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எரிபொருள் வரிசை குறையவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்