மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குமாறு பணிப்புரை!
Prabha Praneetha
2 years ago
மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான செயற்திட்டத்தை முறைப்படி முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மருந்து இறக்குமதியை நிர்வகிப்பது தொடர்பில் சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மருந்து உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதால், அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி அதற்கான நடைமுறைகளை தயாரிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
உலக வங்கியினால் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 23 மில்லியன் டொலர்களில் இதுவரை 18.6 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளமை இந்த கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.