இலங்கை அரசாங்கம் மற்றுமொரு கடன் தொகுதியை திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Kanimoli
2 years ago
இலங்கை அரசாங்கம் மற்றுமொரு கடன் தொகுதியை திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி நேற்றைய தினம் செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் டொலர், சர்வதேச கடனை இலங்கை அரசாங்கத்தினால் செலுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 இல் பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட சர்வதேச இறையாண்மைப் பத்திரம் நேற்றைய தினதுடன் முதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டு உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றை மறு அறிவித்தல் வரை செலுத்தப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.