யாழ் போதனா வைத்தியசாலைக்கு திரு S.K.நாதன் அவர்களினால் 24 மில்லியன் பெறுமதியான மருந்து பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டது
24 மில்லியன் ( 02 கோடி 40 லட்சம் ) பெறுமதியான மருத்து பொருட்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு S.K.நாதன் அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் மருத்துவ நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
S.K.நாதன் அறக்கட்டளையின் முழுமையான நிதிப்பங்களிப்பினால் யாழ்போதனா வைத்தியசாலையினரின் அவசர கோரிக்கையை கருத்திற் கொண்டு அத்தியாவசியமாக மருந்து பொருட்கள் திரு.சுப்பிரமணியம் கதிகாமநாதன் அவர்களினால் 24 மில்லியன் பெறுமதியான மருந்துகளை சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஜானக ஸ்ரீ சந்திரகுப்தா மற்றும் டொக்டர் அன்வர் ஹம்தானி Dr.Anvar Hamdani ஆகியோரிடம் உத்தியோக பூர்வமாக அமைச்சின் செயலகத்தில் நேற்றைய முன் தினம் (2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி)S.K.நாதன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.
இவ் நன்கொடை மருந்துகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மிக விரைவில் விநியோகிக்கப்படும் என அமைச்சின் செயலாளரால் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்காலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மானுடம் மிக்க மருத்துவ சேவையை அதன் தேவை கருதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று இலங்கையின் பல வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை நிலவும் அதேவேளை அவற்றை பெற்றுக்கொள்வதிலும் பல இடர்பாடுகளும் சிரமமும் காணப்படுகின்றது பல வைத்தியசாலைகளில் சில மருத்துவ பொருட்கள் தீர்ந்து விட்டாதாகவும் அதனை பெற்றுத்தரும் படி கோரிக்கைகளை முன் வைத்துவரும் நிலையில் முன்னுதாரணமாக வடபகுதிக்கான மருத்துவ வளங்களில் அதிகூடிய கரிசனையுடன் செயற்படும் S.K. நாதனின் இவ் மானுட மருந்துவ சேவை சிறப்பானதாகும்.
அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு தற்போது தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தற்போதைய யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் திரு . நந்தகுமார் Director (Acting), JTH, Dr Nanthakumar அவர்களிடம் ரூபா 860,000/= பெறுமதியான மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி S.K முதியோர் இல்லம், S.K.அறிவுச்சோலை சிறுவர் இல்லம் காரைநகர் S.K நாதன் நற்பணிமன்ற ஆகியவற்றின் பணிப்பாளரான திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அனுசரணையிலும் ஏற்கனவே யாழ்போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு
* கிளிநொச்சியில் 5.5 கோடி ரூபாவில் அமைக்கப்பட்ட கண் மற்றும் என்பு முறிவு விடுதிகள்
* யாழ் பல்கலைகழக மருத்துவப் பீடத்திற்கு PCR இயந்திரம்
* யாழ் போதனாவைத்தியசாலைக்கு CT scan இயந்திரம் என வடக்கின் மருத்துவ துறைக்கு பல்வேறு வகையில் உதவிகளை வழங்கியுள்ளார்.
* Covid 19 நிலவிய போது மருத்துவ பொருட்கள் , பாதுகாப்பு உடைகள் மற்றும் மருத்துவ இயந்திரங்கள் உபகரணங்கள் என்பனவற்றை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வு சுகாதார அமைச்சின் செயலகத்தில்இடம் பெற்றது.