ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை பயிர்ச்செய்கைக்கு வழங்க தீர்மானம்
ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்கள் குறுகிய கால பயிர் சாகுபடிக்காக விவசாய சங்கங்கள், முதியோர் சங்கங்கள் மற்றும் இளைஞர் சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை குறுகிய கால பயிர்ச் செய்கைக்காக குத்தகைக்கு விடுவது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
பிரதேச செயலக மட்டத்தில், பிரதேச செயலாளர்கள்இவிவசாய கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள் இணைந்து புகையிரத காப்பு மற்றும் வீதி இருப்புப் பகுதிகளில் பயிர் செய்வதற்கு ஏற்ற நிலங்களைக் கண்டறிந்து இரண்டு அல்லது மூன்று ஏக்கர் காணிகளையும், 10 மற்றும் 15 பேர்ச் போன்ற சிறிய காணிகளையும் வழங்கவும் எந்த நிலத்திலும் கட்டடம் கட்ட அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தனியாருக்குக் காணி வழங்கக் கூடாது எனவும்இ விவசாயம் செய்யக்கூடிய ஒவ்வொரு அங்குல நிலமும் இதற்காகப் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.