ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பெருந்தொகை பணத்தை எண்ணிய நபர் கைது

Kanimoli
2 years ago
ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பெருந்தொகை பணத்தை எண்ணிய நபர் கைது

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்தனர்.

இதன்போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

னாதிபதி மாளிகையில் பெருந்தொகை பணம் மீட்பு
குறித்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களால் பெருந்தொகை பணம் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு மீட்கப்பட்ட பணத்தினை நபரொருவர் எண்ணிக்கணக்கிட்ட காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில்,அந்த குழுவில் இருந்த சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!