மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

Nila
2 years ago
மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டில் அமைப்பு மாற்றம் தேவை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டத்திற்கு அமைவாக சகல தனி நபர்களும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கும் அதே உரிமை உண்டு எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் ஊழியர்களுக்கு உரையாற்றினார்.

சவாலான காலக்கட்டத்தில் தான் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு முன்னேறுவதற்கு இதுவரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!