இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா! - பாடசாலை மாணவர்கள் குறித்து சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Nila
2 years ago
இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா! - பாடசாலை மாணவர்கள் குறித்து  சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

கொவிட்-19 நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

அவ்வாறான அறிகுறிகள் கொண்ட மாணவர்களை உடனடியாக வைத்தியரிடம் அழைத்து செல்லுமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையில் நேற்று கோவிட் தொற்றினால் 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், நேற்று மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல் மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுதல் போன்றவற்றை மீண்டும் மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!