உப தபால் அலுவலகங்களை மூட தீர்மானம்
Prabha Praneetha
2 years ago
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று மூடப்படவுள்ளன.
நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப தபால் அலுவலகங்களும் திங்கள், செவ்வாய், புதன், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை திறக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் நிலையங்கள் திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறக்கப்பட்டிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.