17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
Prabha Praneetha
2 years ago
17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்டியல் முறை மூலம் குறித்த பணத்தொகையை வௌிநாட்டுக்கு அனுப்ப முற்பட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.