ரணிலின் மன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை

Kanimoli
2 years ago
ரணிலின் மன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை

சிறிலங்கா உயர்நீதிமன்றால் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரஞ்சனின் விடுதலை தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

இந்த ஆவணங்கள் அடங்கிய கோப்புக்கு சட்டமா அதிபரின் ஒரு பரிந்துரை அவசியமாக இருக்கின்றது. அது கிடைத்தவுடன் சிறிலங்கா அதிபர், ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் கடிதத்தில் கையெழுத்திடுவார்.

இதனடிப்படையில், விரைவில் சில தினங்களுக்குள் ரஞ்சன் ராமநாயக்க அதிபரின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

இதனையடுத்து அவர் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதுடன் அங்கிருந்து வெலிகடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!