அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 368 ரூபாவாக பதிவு
#SriLanka
#Dollar
Prasu
2 years ago
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 368 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளது.அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 44 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 377 ரூபா 56 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 14 சதமாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 449 ரூபா 89 சதமாகவும், பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது.