ஈராக் போராட்டக்காரர்களால் பாராளுமன்றம் முற்றுகை!
ஈராக்கின் பக்தாத் நகரில் அமைந்துள்ள ஈராக் பாராளுமன்றை நேற்றைய தினம் மாபெரும் மக்கள் கூட்டம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களையும், கோஷங்களையும் எழுப்பி தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈரானுக்கு எதிராக சாபங்களையும், எதிர்ப்பு கோஷங்களையும் வெளியிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கின் அரசியலில் ஈரான் செல்வாக்கு செலுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும், ஈராக்கின் பிரதம அமைச்சரை தெரிவு செய்வதில் ஈரானின் தலையீடு இருப்பதின் காரணமாக இழுபறி நிலை தொடர்ந்து காணப்படு வரும் நிலையில் ஈரானின் தலையீட்டையும், சட்டவிரோத அதிகாரத்தையும் எதிர்த்து மேற்படி மக்கள் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்ற போதிலும் ஈரானின் ஆதரவுக் கட்சியாக ‘ஷியட்’ கட்சி பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றதாகவும் இதனால் நீதியான தேர்தல் ஒன்றை முன்னெடுக்க முடியாத நிலையில் ஈராக்கின் அரசியல் காணப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.