இலங்கை குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த சீனா

Nila
2 years ago
இலங்கை குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டை  மறுத்த சீனா

சீனாவின் முதலீடுகள் மற்றும் இலங்கையில் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் நாடு திவாலாகிவிட்டதாக அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்த கருத்துக்கு சீனா பதிலளித்துள்ளது.

இலங்கையில் உள்ள பாரிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் காரணமாக நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகமான மற்றும் உயர் மட்டத்தை எட்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian, இலங்கை எப்போதுமே விஞ்ஞான திட்டமிடல் மற்றும் முழுமையான சரிபார்ப்புடன் சீனா-இலங்கை நடைமுறை ஒத்துழைப்பை நடத்தி வருகிறது என்று கூறினார்.

அதில் மறைவாக எதுவும் இல்லை என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

புதன் கிழமை புது தில்லியில் பேசிய சமந்தா பவர், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல முக்கியமான நடவடிக்கைகளுடன் இந்தியா உண்மையில் வேகமாக பதிலளித்ததாகவும், ஆனால் கணிசமான நிவாரணத்திற்காக சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

99 வருட குத்தகை அடிப்படையில் கடன் பரிமாற்றமாக சீனாவால் கையகப்படுத்தப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட இலங்கையில் சீனாவின் பயனற்ற திட்டங்களை அவர் கடுமையாக விமர்சித்தார்.

எவ்வாறாயினும், அவரது குற்றச்சாட்டுகளை நிராகரித்த  Zhao Lijian, “சீனாவின் வெளிநாட்டுக் கடன்கள் சர்வதேச மூலதனச் சந்தை மற்றும் பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளை விட மிகக் குறைந்த பங்கையே பெறுகின்றன.

இலங்கையின் கடனில் 10 வீதம் வைத்திருக்கும் சீனா, கடன் குறைப்பு அல்லது மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளுக்கு சாதகமான பதில்களைப் பெறவில்லை.

மேலும் கருத்து தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இலங்கை போன்ற பல வளரும் நாடுகளுக்கு பாதகமான வட்டி விகித உயர்வு போன்றவற்றை அமெரிக்கா செய்துள்ளது.

அதன் மூலம் வளரும் நாடுகள் கடுமையான பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சர்வதேச சமூகத்திற்கு அமெரிக்கா அவ்வப்போது விதிக்கும் பல்வேறு பொருளாதார தடைகளால் மூன்றாம் உலகில் வளரும் நாடுகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான தடைகள் மற்றும் கட்டணத் தடைகள் தொழில்துறை சங்கிலிகளின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதுடன், ஆற்றல், உணவு மற்றும் பிற பொருட்களின் விலைகளை மோசமாக்கியுள்ளன. 

இது இலங்கை உட்பட பல வளரும் நாடுகளில் நிதி மற்றும் பொருளாதார நிலைமைகளின் சுருக்கத்தை மேலும் மோசமாக்கியுள்ளது, என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!