இலங்கையிலுள்ள வங்கிகளின் நிலமைகள் மேலும் மோசமடையும்! பேராசிரியர் எச்சரிக்கை!

Nila
2 years ago
இலங்கையிலுள்ள வங்கிகளின் நிலமைகள் மேலும் மோசமடையும்! பேராசிரியர் எச்சரிக்கை!

இலங்கை மத்திய வங்கிக்கு உள் செல்லும் பணம் குறைவாகவும், வங்கிகளின் ஊடாக இறக்குமதிக்கு செலுத்தப்படும் பணத்தொகை அதிகமாகவும் உள்ளதாக கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதனை மத்திய வங்கியினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், மத்திய வங்கி மேலும் பொருட்களுக்கான தடைகளை இறுக்குவதற்கு முயற்சிப்பதாகவும், நிதியமைச்சை அணுகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், மத்திய வங்கி குறிப்பிடுவது போன்று பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டால் எரிபொருள் போன்று வெங்காயம்,அரிசி,மா,சீனி என்பனவற்றிற்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையேற்படும்.

இதன் காரணமாக நிதியமைச்சு இரு பக்கத்திலும் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.