சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் கடன் வழங்குவது தொடர்பில் சாதகமான முடிவு!!

Nila
2 years ago
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் கடன்  வழங்குவது தொடர்பில் சாதகமான முடிவு!!

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவிப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் முடிவடையும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

Nikkei Asia News Service உடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் முடிவடைந்து சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த கடன் உதவிப் உதவி மூலம், இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 1.5 பில்லியன் டொலர் நிதி வசதியை செயற்படுத்துவதற்கும், 1.5 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீனா இலங்கைக்கு கடன் வழங்கும் முக்கிய நாடாக கருதப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.