பயணிகளிடம் பயணச்சீட்டு வழங்காத இ. போ. ச. நடத்துனர்கள் மூவரின் சேவை இடைநிறுத்தப்பட உள்ளது - இலங்கை போக்குவரத்து சபை
Kanimoli
2 years ago
பயணிகளிடம் பணம் பெற்று பயணச்சீட்டு வழங்காத இ. போ. ச.(லங்கம) நடத்துனர்கள் மூவரின் சேவை இடைநிறுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
மொனராகலையிலிருந்து மாகும்புர, காலி மற்றும் கடவத்தை செல்லும் இரண்டு அதிவேகப் பேருந்துகளின் மூன்று நடத்துனர்கள் மற்றும் தங்காலையிலிருந்து எம்பிலிப்பிட்டிய வரையிலான பேருந்து ஆகியவற்றிலேயே பணம் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்து நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.