இலங்கைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குகிறது அமெரிக்கா

Kanimoli
2 years ago
இலங்கைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குகிறது அமெரிக்கா

இலங்கைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்க வழங்கவுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அறிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து நடத்தப்படும் ஆட்கடத்தல் தடுப்பு திட்டத்திற்காக குறித்த நிதியுதவியை வழங்குவதாக ஜூலி சுங் மேலும் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமெரிக்க தூதுவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கடத்தலின்போது தப்பிப்பிழைப்பவர்களைப் பாதுகாக்கவும் கொடூரமான குற்றங்களில் குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று சுங் தமது டுவிட்டில் கூறியுள்ளார்.

இதேவேளை அமெரிக்க தூதுவர் இன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரியை சந்தித்தார்.

இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இருதரப்பு உறவுகளையும் ஜனநாயக ஆட்சி முதலீடு என்பவற்றுடன் இலங்கை மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!