எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் மரணம்
Reha
2 years ago
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் திடீர் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 71 வயதுடையவர் என்பதோடு மாரடடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.