9ம் நாடாளுமன்றின் மூன்றாம் அமர்வுகள் எவ்வித மரியாதை வேட்டுக்களும் இன்றி இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளது
![9ம் நாடாளுமன்றின் மூன்றாம் அமர்வுகள் எவ்வித மரியாதை வேட்டுக்களும் இன்றி இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளது](https://ms.lanka4.com/images/thumb/2022/08/ranil.png)
இலங்கையின் 9ம் நாடாளுமன்றின் மூன்றாம் அமர்வுகள் எவ்வித மரியாதை வேட்டுக்களும் இன்றி இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாக உள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை
ஜனாதிபதி ரணில், இன்றைய தினம் அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்ற உள்ளார்.
வழமை போன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும் மரியாதை வேட்டுக்கள், வாகனத் தொடரணிகள் எதுவும் இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் நாடாளுமன்ற வருகையின் போது மிக எளிமையான நிகழ்வு ஒன்று மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை வரவேற்பதற்காக நாடாளுமன்றின் எதிரில் முப்படையினர் ஜனாதிபதி மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட உள்ளதுடன், ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய கொடி மட்டும் ஏற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)