வடக்கு மாகாண பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானம்
Kanimoli
2 years ago
வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் தலவாக்கலை பகுதியில் பெய்த அடை மழை காரணமாக மண் மேடு சரிந்து வீழுந்ததன் காரணமாக பாடசலைக்ககான வாகன தரிப்பிடம், நீர் தாங்கி என்பன முற்றாக சேதமடைந்துள்ளன.
மேலும் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைகப்படிருந்த கார் ஒன்றும் பகுதியளவு சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.