ஒரு நாட்டை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியான நிர்வாக கட்டமைப்பு அவசியமானது- ராஜித
Prabha Praneetha
2 years ago
நாட்டை நிர்வகிப்பதற்கான மக்கள் ஆணையைப் பெற முடியாத சில கட்சிகள், நாடாளுமன்றம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பாக பேசிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
சிலர் பலவந்தமாக சமூகத்தின் மீது கருத்துக்களை திணிக்க முயற்சிப்பதாகவும், அவ்வாறான கருத்துக்களை மக்களின் ஆணையாக கருத முடியாது எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்கள் மீதும் அதிருப்தி இருந்தால், அடுத்த தேர்தலில் புதிய உறுப்பினர்களை ஜனநாயக ரீதியாக நியமிக்கும் அதிகாரம் பொதுமக்களுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியான நிர்வாக கட்டமைப்பு அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.