மரத்தில் நீண்ட நேரமாக சிக்கிய மலைப்புலி உயிரிழப்பு
நீண்ட நேரமாக மரத்தில் சிக்கியிருந்த மலைப்புலி ஒன்று உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணியா வனவிலங்கு அலுவலகத்தின் வனவிலங்கு தள காவலர் பிரபாஷ் கருணாதிலக தெரிவித்தார்.
ஹட்டன் வனராஜா தோட்டத்தின் சம்மர்ஹில் பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள் மற்றும் மலைப்புலிகளை வேட்டையாடுவதற்காக இரவு வேளையில் சில குழுவினர் வைத்த வலையில் மலைப்புலி ஒன்று நேற்று சிக்கியது.
மலைப்புலியை காப்பாற்றுவதற்காக வனவிலங்கு உத்தியோகத்தர்கள் மரத்தை வெட்டி புலியை கீழே இறக்க முற்பட்ட போது மலைப்புலி கீழே விழுந்ததாக பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.
மரத்திலிருந்து மலைப்புலியை மீட்க கடுமையாக முயற்சித்த போதுஇ பொருத்தப்பட்டிருந்த கம்பியால் வயிறு அறுந்து மலைப்புலி உயிரிழந்ததாக பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.
உயிரிழந்த மலைப்புலி தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்ததன் பின்னர் உயிரிழந்த மலைப்புலியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பிரபாஷ் கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.